பீஸ்ட்: நடன இயக்குநரைக் கட்டியணைத்து வாழ்த்திய விஜய்
பீஸ்ட் படப்பிடிப்பில் விஜய்யுடன் இணைந்து தனது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார் நடன இயக்குநர் ஜானி.
பீஸ்ட் படப்பிடிப்பில் விஜய்யுடன் இணைந்து தனது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார் நடன இயக்குநர் ஜானி.
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு பீஸ்ட் எனப் பெயரிடப்பட்டுள்ளது. மாஸ்டர் படத்துக்கு அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். இது அவருடைய 65-வது படம். ஒளிப்பதிவு - மனோஜ் பரமஹம்சா. இசை - அனிருத். இப்படத்தின் கதாநாயகியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே தேர்வாகியுள்ளார். பூஜா ஹெக்டே, 2012-ல் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பிறகு ஏராளமான தெலுங்குப் படங்களிலும் சில ஹிந்திப் படங்களிலும் நடித்துள்ளார்.
பீஸ்ட் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த சில வாரங்களாகப் படப்பிடிப்பு நடைபெறாமல் உள்ளது. இந்நிலையில் திரைப்படப் படப்பிடிப்புக்குத் தமிழகஅரசு அனுமதி அளித்துள்ளதால் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் மீண்டும் நடைபெற்று வருகிறது. பாடல் காட்சிக்கான படப்பிடிப்பில் விஜய்யும் பூஜா ஹெக்டேவும் பங்கேற்று வருகிறார்கள்.
Advertisement
Advertisement
புட்டபொம்மா என்கிற புகழ்பெற்ற தெலுங்குப் பாடலுக்கு நடனம் அமைத்த நடன இயக்குநர் ஜானி, பீஸ்ட் படத்தில் பணியாற்றி வருகிறார். ஜானியின் பிறந்த நாளை பீஸ்ட் படக்குழுவினர் படப்பிடிப்புத் தளத்தில் கொண்டாடியுள்ளார்கள். அப்போது ஜானியை அணைத்தபடி விஜய் வாழ்த்து தெரிவித்த புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.