எஸ்பிபி பாடிய 'அண்ணாத்த' பாடல் அக்டோபர் 4இல் வெளியீடு
ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படத்தில் மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய பாடல் அக்டோபர் 4ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படத்தில் மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய பாடல் அக்டோபர் 4ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் சிவா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் படத்தை இயக்கியுள்ளார்.
இதையும் படிக்க | சர்வைவர் நிகழ்ச்சியில் புதிதாக களத்தில் இறங்கும் பிரபல நடிகர்: வெளியான ப்ரமோ விடியோ
Advertisement
Advertisement
அண்ணாத்த எனப் பெயரிடப்பட்ட இந்தத் திரைப்படத்தில் நயன்தாரா, கீா்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் போன்றோர் நடித்துள்ளார்கள். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இமான் இசையமைக்கிறார்.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள அண்ணாத்த படம் தீபாவளிக்கு, நவம்பர் 4 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதையும் படிக்க | சிவாஜி கணேசனும் பெருமாள் முதலியாரும்
இந்நிலையில் அண்ணாத்த திரைப்படத்தில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய பாடல் அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகவுள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.