FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடிக்கும் டிக் டாக் பிரபலம்: அவரே சொன்ன தகவல் - ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்

விஜய்யின் பீஸ்ட் படத்தில் டிக் டாக் மூலம் பிரபலமான நடிகை காயத்ரி ஷான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 

Updated On : 13 அக்டோபர் 2021, 1:17 pm IST
பகிர்:

விஜய்யின் பீஸ்ட் படத்தில் டிக் டாக் மூலம் பிரபலமான நடிகை காயத்ரி ஷான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் விஜய் தற்போது நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். நண்பன் படத்துக்குப் பிறகு பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்துள்ளார்.

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, இயக்குநர் செல்வராகவன் வில்லனாக நடிக்கிறார். மேலும் இந்தப் படத்தில் யோகி பாபு, விடிவி கணேஷ், ஷைன் டாம் சக்கோ, அபர்னா தாஸ் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் இந்தப் படத்தில் இலங்கையை சேர்ந்த டிக் டாக் பிரபலம் காயத்ரி ஷான்  நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அதனை விஜய் ரசிகர்கள் பகிர்ந்து டிரெண்ட் செய்து வருகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments