முகப்பு
செய்திகள்

இன்று மாலை 6 மணிக்கு ’அண்ணாத்த’ டீசர்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'அண்ணாத்த’ திரைப்படத்தின் டீசர் இன்று (அக்-14) மாலை 6 மணிக்கு வெளியாகிறது.

Updated On : 14 அக்டோபர் 2021, 10:53 am IST
இன்று(அக்இன்று மாலை 6 மணிக்கு ’அண்ணாத்த’ டீசர்-14) மாலை 6 மணிக்கு ’அண்ணாத்த’ டீசர்
பகிர்:

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'அண்ணாத்த’ திரைப்படத்தின் டீசர் இன்று (அக்-14) மாலை 6 மணிக்கு வெளியாகிறது.

விஸ்வாசம் படத்திற்கு பின்  இயக்குநர் சிவா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் இப்படத்தை இயக்கியுள்ளார். சில நாட்களுக்கு முன் ’அண்ணாத்த’ முதல் பார்வை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை அடைந்த நிலையில் இப்படத்தில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய பாடலும் கடந்த அக்- 4ஆம் தேதி வெளியாகி பெரிதும் ரசிக்கப்பட்டது. 

இந்நிலையில் ‘அண்ணாத்த’ படத்தின் டீசரை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு அறிவித்திருக்கிறது.

ரஜினியுடன் நயன்தாரா, கீா்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் போன்றோர் நடித்துள்ளார்கள். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இமான் இசையமைக்கிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ’அண்ணாத்த’ படம் தீபாவளிக்கு, நவம்பர் 4 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments