செய்திகள்

அபிஷேக் காலில் விழும் தாமரை: சின்ன பொண்ணா ? தாமரையா ? குழப்பத்தில் போட்டியாளர்கள்

தற்போது வெளியான பிக்பாஸ் ப்ரமோவில் யாரைக் காப்பாற்றுவது என்ற குழப்பத்தில் போட்டியாளர்கள் இருக்கிறார்கள். 

DIN

தற்போது வெளியான பிக்பாஸ் ப்ரமோவில் யாரைக் காப்பாற்றுவது என்ற குழப்பத்தில் போட்டியாளர்கள் இருக்கிறார்கள். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் நாடியா சங் வெளியேறினார். தற்போது பிக்பாஸ் வீட்டில் 16 பேர் இருக்கின்றனர். இதனையடுத்து இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

இந்த நிலையில் தற்போது வெளியான இரண்டாவது ப்ரமோவில், ''எல்லோரும் உனக்காக தான் பேசிட்டு இருக்காங்க என அபிஷேக், தாமரையிடம் சொல்கிறார். அதனைக் கேட்கும் தாமரை, கண் கலங்கியபடி அபிஷேக்கின் காலில் விழ, அவரை அபிஷேக் தூக்கி சமாதானப்படுத்துகிறார்.

மற்றொருபுறம் ராஜு, பிரியங்கா உள்ளிட்டோர் தாமரையைக் காப்பாற்ற வேண்டும் என்று சொல்ல, இமான் அவர்களிடம் தாமரைக்கு நிறைய பேர் ஆதரவு தெரிவிக்கிறார்கள். நீங்கள் ஏன் சின்னப்பொண்ணை காப்பாற்றக் கூடாது எனக் கேட்கிறார். அதன் பிறகு மனம் மாறிய பிரியங்கா நான் சின்னப்பொண்ணுவை நாமினேட் செய்யப்போகிறேன் என்கிறார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறுவதில் இருந்து காப்பாற்றுவதற்கான வாய்ப்பாக இது இருக்கும் என்று புரிந்துகொள்ளமுடிகிறது. எனினும் எதற்காக சின்னப்பொண்ணுவையும், தாமரையையும் போட்டியாளர்கள் காப்பாற்ற முயற்சிக்கறார்கள் என்பது நிகழ்ச்சி ஒளிபரப்பானால் மட்டுமே முழுமையாக தெரியும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோபி, சுதாகரின் ஓ காட் பியூட்டிஃபுல் புரோமோ விடியோ!

பிரெஸ்டீஜ் எஸ்டேட்ஸ் லாபம் ரூ.292.5 கோடியாக உயர்வு!

ரஷிய ட்ரோன்களில் இந்தியாவின் உதிரி பாகங்கள்: உக்ரைன் குற்றச்சாட்டு

கொல்லப்பட்ட ஆர்வலரின் உடலை ஒப்படைக்க மறுக்கும் இஸ்ரேல்! 6 நாள்களாக உண்ணாவிரதத்தில் பெண்கள்!

உத்தராகண்ட்டில் மேக வெடிப்பு: அதி கனமழை, வெள்ளப்பெருக்கில் ராணுவ வீரர்கள் மாயம்!

SCROLL FOR NEXT