FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

'அசுரன்' படத்துக்குப் பிறகு மீண்டும் தனுஷுடன் இணையும் நடிகர் - மகிழ்ச்சியில் ரசிகர்கள்

தனுஷின் 44வது படம் குறித்து, சன் பிக்சர்ஸின் அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Updated On : 4 ஆகஸ்ட் 2021, 1:27 pm IST
பகிர்:

தனுஷின் 44வது படம் குறித்து, சன் பிக்சர்ஸின் அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான 'அசுரன்' விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. எழுத்தாளர் பூமணியின் 'வெக்கை' என்ற புதினத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியிருந்தது. 

இந்தப் படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நடிகர் தனுஷும், சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை இயக்குநர் வெற்றிமாறனும் பெற்றனர். இந்தப் படம் தெலுங்கில் 'நாரப்பா' என்ற பெயரில் நடிகர் வெங்கடேஷ் நடித்து ரீமேக் செய்யப்பட்டது. 

அசுரன் படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அவரது நடிப்பு இந்தப் படத்துக்கு பெரும் பலமாக அமைந்திருந்தது. இந்த நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் மீண்டும் தனுஷூடன் ஒரு படத்தில் இணையவிருக்கிறார். 

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை தனுஷ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிக்கிறார். யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் ஆகிய படங்களை இயக்கி மித்ரன் ஜவஹர் இந்தப் படத்தை இயக்கவிருக்கிறார். இயக்குநர் இமையம் பாரதிராஜா இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்தப் படத்துக்காக தனுஷூடன், இசையமைப்பாளர் அனிருத் இணையவிருக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments