ட்விட்டரை கலக்கி வரும் நயன்தாரா (படங்கள்)
நடிகை நயன்தாரா நீண்ட இடைவேளைக்குப் பிறகு தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்ததைத் தொடர்ந்து, அதன் புகைப்படங்கள் ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
நடிகை நயன்தாரா நீண்ட இடைவேளைக்குப் பிறகு தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்ததைத் தொடர்ந்து, அதன் புகைப்படங்கள் ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
நயன்தாரா கடந்த பல வருடங்களாகவே தான் நடிக்கும் படத்தின் இசை வெளியீட்டு விழாக்கள், விளம்பர நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றில் கலந்துகொள்வதைத் தவிர்த்து வருகிறார். சமூக ஊடகங்களில்கூட அவருக்கு கணக்கு இல்லை. ரசிகர்களால் அவரை திரைப்படங்களில் மட்டும் காண முடியும் என்ற நிலையே இருந்து வருகிறது.
இதையும் படிக்க | விரைவில் சின்னத்திரையில் நடிகை நயன்தாரா - எந்த தொலைக்காட்சியில் தெரியுமா ?
Advertisement
Advertisement
இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்கபதாகத் தகவல் வெளியானது.
அதற்கான படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாகத் தெரிகிறது. நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பில் அவர் பங்கேற்ற புகைப்படங்கள் தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அந்தப் புகைப்படங்களை அதிகளவில் பகிர, நயன்தாரா ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.
நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம் ஆகஸ்ட் 13-ம் தேதி ஹாட் ஸ்டாரில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.