இளையராஜா - யுவன் இசை கூட்டணியில் விஜய் சேதுபதியின் 'மாமனிதன்' டீசர் இதோ
இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா இசை கூட்டணியில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் டீசர் வெளியாகியுள்ளது.
தர்மதுரை படத்துக்கு பிறகு விஜய் சேதுபதி - இயக்குநர் சீனு ராமசாமி இணைந்துள்ள படம் மாமனிதன். இந்தப் படத்தை யுஎஸ்ஆர் பிலிம்ஸ் சார்பாக யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார். மேலும் இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளனர்.
இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
இதையும் படிக்க | சூர்யா படத்துக்காக இணையும் அனிருத் மற்றும் ஜி.வி.பிரகாஷ்
Advertisement
Advertisement
படத்தின் பணிகள் முடிந்து நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் இந்தப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளதால், இந்தப் படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.