200 மில்லியன் ஆதரவாளர்கள்: யூடியூப் தளத்தில் சாதனை படைத்த இந்திய நிறுவனம்
உலகளவில் இந்த எண்ணிக்கையைத் தொட்ட முதல் யூடியூப் சேனல் என்கிற பெருமையைப் பெற்றுள்ளது...
இந்திய இசை நிறுவனமான டி சீரீஸ், யூடியூப் தளத்தில் 200 மில்லியன் ஆதரவாளர்களை அடைந்த முதல் சேனல் என்கிற சாதனையைப் படைத்துள்ளது.
மறைந்த குல்ஷன் குமார் 1983-ல் தொடங்கிய திரைப்பட இசை நிறுவனம் - டி சீரிஸ் (T-Series). புகழ்பெற்ற பாலிவுட் படங்களின் பாடல்களை வெளியிட்டு நெ.1 இசை நிறுவனமாக உள்ளது.
யூடியூப் தளத்தில் டி சீரீஸுக்கு எனத் தனியாக சேனல் உள்ளது. இந்நிலையில் டி சீரீஸ் யூடியூப் தளம் 200 மில்லியன் ஆதரவாளர்கள் (subscribers) என்கிற இலக்கை எட்டியுள்ளது. உலகளவில் இந்த எண்ணிக்கையைத் தொட்ட முதல் யூடியூப் சேனல் என்கிற பெருமையைப் பெற்றுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் உள்ள அமெரிக்காவைச் சேர்ந்த Cocomelon - Nursery Rhymes என்கிற கல்வி யூடியூப் தளம் 123 மில்லியன் ஆதரவாளர்களைக் கொண்டுள்ளது.
Advertisement
Advertisement
2019 மே மாதத்தில் 100 மில்லியன் ஆதரவாளர்களைக் கொண்ட முதல் யூடியூப் சேனல் என்கிற பெருமையை அடைந்த டி சீரீஸ், அடுத்த இரண்டு வருடங்கள் கழித்து தனது எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி 200 மில்லியன் ஆதரவாளர்கள் என்கிற யாரும் தொட முடியாத உயரத்தை எட்டியுள்ளது.
மேலும் பல்வேறு மொழிகளில் 29 யூடியூப் சேனல்களைக் கொண்டுள்ள டி சீரீஸ், ஒட்டுமொத்தமாக 382 மில்லியன் ஆதரவாளர்களை அடைந்துள்ளது.
Related Article
சிம்புவின் 'கொரோனா குமார்' படத்துக்கு இசையமைப்பாளர் யார் தெரியுமா?
மீண்டும் 'துப்பறிவாளன் 2' - விஷால் பகிர்ந்த தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி
திருமண நாளில் மறைந்த மனைவி குறித்து இயக்குநர் அருண்ராஜா உருக்கம்
மீண்டும் இணையும் 'பருத்திவீரன்' கூட்டணி: இயக்குநர் அமீரின் அடுத்தப் படம் அறிவிப்பு
'விக்ரம் வேதா' ஹிந்தி ரீமேக் குறித்து வெளியான சுவாரசியத் தகவல்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.