புத்தாண்டு வாழ்த்து சொன்ன இளையராஜா - ''இளமை இதோ இதோ...''
இசையமைப்பாளர் இளையராஜா தனது ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒவ்வொருமுறையும் சகலகலா வல்லவன் படத்தில் இடம்பெற்ற இளமை இதோ இதோ என்ற பாடலுடன் தான் புத்தாண்டு துவங்கும். இளையராஜா இசையில் எஸ்பிபி குரலில் விஷ் யூ ஏ ஹேப்பி நியூ இயர் என்று கேட்பதற்கு இணையாக இதுவரை வேறு எந்த பாடல்களும் ரசிகர்களுக்கு நிறைவைத் தரவில்லை.
அந்தப் பாடல் வெளியாகி கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாகிறது. இந்த நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறி விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிக்க | விஜய் தேவரகொண்டா - மைக் டைசன் இணைந்து நடிக்கும் 'லைகர்' பட மிரட்டலான விடியோ
Advertisement
Advertisement
அதில் காரில் பயணித்த படியே விஷ் யூ ஏ ஹேப்பி நியூ இயர் என்று குதூகலத்துடன் பாடுகிறார். அவர் தோற்றத்துக்கு வயதானாலும் அவர் மனதுக்கு இன்னமும் வயதாகவில்லை என்பது அந்த விடியோ ஒரு சாட்சி. அதனால் தான் அவரால் இந்தக் காலத்து இளைஞர்களும் ரசிக்கும் படியான பாடல்களைக் கொடுக்க முடிகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.