விஜய் தேவரகொண்டா நடிக்கும் லிகர் திரைப்படத்தின் கிளிம்ஸ் விடியோ வெளியீடு
விஜய் தேவரகொண்டா நடித்துள்ள லிகர் திரைப்படத்தின் கிளிம்ஸ் விடியோ வெள்ளிக்கிழமை வெளியானது.
விஜய் தேவரகொண்டா நடித்துள்ள லிகர் திரைப்படத்தின் கிளிம்ஸ் விடியோ வெள்ளிக்கிழமை வெளியானது.
இயக்குநர் பூரி ஜெகநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள திரைப்படம் லிகர். குத்துச் சண்டை போட்டியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் திரைப்படமானது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகி வருகிறது. தனிஷ்க் பாக்ஷி, மணி சர்மா இந்தத் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.
இதையும் படிக்க | 3 அணு உலைகளை மூடும் ஜெர்மனி: புதிய ஆற்றல் மூலங்களுக்கு மாற தீவிரம்
Advertisement
Advertisement
இந்தத் திரைப்படத்தில் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.
இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் கிளிம்ஸ் விடியோ வெள்ளிக்கிழமை வெளியானது. 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் படம் திரைக்கு வர உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.