ஹிந்திக்கு செல்லும் அருண் விஜய்யின் தமிழ் படம் - கதாநாயகன் அறிவிப்பு
ஹிந்தியில் மறு உருவாக்கம் செய்யப்படும் அருண் விஜய்யின் 'தடம்' படத்தில் ஆதித்யா ராய் கபூர் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார்.
ஹிந்தியில் மறு உருவாக்கம் செய்யப்படும் அருண் விஜய்யின் 'தடம்' படத்தில் ஆதித்யா ராய் கபூர் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார்.
மகிழ் திருமேணி இயக்கத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான படம் 'தடம்'. இந்தப் படம் விமரிசன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது.
இதையும் படிக்க| உடற்பயிற்சி செய்தபோது தவறிவிழுந்த நடிகர் கார்த்திக் - மருத்துவமனையில் அனுமதி
Advertisement
இந்தப் படத்தில் வித்ய பிரதீப், தான்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட், சோனியா அகர்வால், யோகிபாபு, ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஒரு கொலை வழக்கில் ஒரே உருவ ஒற்றுமை உள்ள இருவர் மேல் காவல்துறையினருக்கு சந்தேகம் எழுகிறது.
இருவரில் யார் அந்தக் கொலையை செய்தார்கள் என்பது தான் இந்தப் படத்தின் கதை. படத்தின் திரைக்கதையும் விறுவிறுப்பாக அமைக்கப்பட்டிருந்தது படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
இந்தப் படம் தெலுங்கில் ராம் பொத்தினேனி நடிப்பில் 'ரெட்' என்ற பெயரில் மறு உருவாக்கம் செய்யபட்டு நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படம் தற்போது ஹிந்திக்கு செல்கிறது. ஹிந்தியில் இந்தப் படத்தில் ஆதித்யா ராய் கபூர் கதாநயகனாக நடிக்கிறார். இந்தப் படம் ஹிந்தியிலும் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.