இயக்குநராகிறாரா நடிகர் சிவகார்த்திகேயன்? கிரிக்கெட் வீரர் நடராஜன் பேட்டி
தனது வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் அத்திரைப்படத்தை இயக்க வாய்ப்புள்ளதாக பிரபல கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
தனது வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் அத்திரைப்படத்தை இயக்க வாய்ப்புள்ளதாக பிரபல கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடிய தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக தகவல் வெளியானது.
இதையும் படிக்க | 10 கோடி பார்வைகளைக் கடந்தது ‘பத்தல பத்தல’ பாடல்
Advertisement
இந்நிலையில் சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கிரிக்கெட் வீரர் நடராஜன், “எனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். மேலும் அவர்தான் அந்தப் படத்தை இயக்குவார் என நினைக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
ஐபிஎல் 2022 போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய நடராஜன் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 ஆட்டத்தில் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டத்தின்மூலம் பிரபலமடைந்தார்.