முகப்பு
செய்திகள்

அஜித் முதுகுல குத்திட்டாங்க: ரசிகர்கள் கிண்டல் ! 

விஜய், அஜித் படங்களை ரெட் ஜெய்ண்ட் வெளியட உள்ளதால் ரசிகர்கள் இணையத்தில் ஒருவரையொருவர் கிண்டலடித்து வருகின்றனர். 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:51 PM
பகிர்:

அஜித்தின் துணிவும் நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால், யாருக்கு அதிக திரையரங்கம் ஒதுக்கப்படும் என்கிற கேள்விகள் எழுந்தன.

வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ “அஜித்துடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் விஜய்தான் நம்பர்.1 இடத்தில் இருக்கிறார். ஆனால், வாரிசு படத்திற்கு குறைவான திரைகளே ஒதுக்கப்பட்டுள்ளன. நான் சென்னைக்கு சென்று உதயநிதியை சந்தித்து கூடுதல் திரைகள் குறித்துப் பேசப்போகிறேன்’ என நேர்காணல் ஒன்றில் பேசிய விடியோ வைரல் ஆனது. இதனால் அஜித் ரசிகர்கள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தனர். தொலைக்காட்சி விவாதங்களில் கூட இது பேசு பொருளானது.  

தற்போது வாரிசு படத்தின் தமிழ்நாட்டில் யார் யார் வெளியிடுகிறார்கள் என விடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது படக்குழு. இதில் சென்னை, செங்கல்பட்டு, கோவை, வட ஆற்காடு, தென் ஆற்காடு பகுதிகளில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறதென அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து ரெட் ஜெய்ண்ட் தனது ட்விட்டர் பக்கத்திலும் இதனை அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இதுகுறித்து விஜய், அஜித் ரசிகர்கள் மீண்டும் ஒருவரையொருவர் கிண்டலடித்து வருகின்றன்ர. இதில் சில ரசிகர்கள், “அஜித்தை முதுகுல குத்திட்டாங்க. இன்னும் எத்தனை பேர்டா இப்படி முதுகுல குத்துவீங்க, தில் ராஜூ சம்பவம், தில் ராஜூ பயந்து விட்டார் துணிவு பார்த்து...” என சமூகவலைதளமே இவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.