செய்திகள்

‘விரைவில் ரசிகர்களை சந்திக்கிறேன்’- ராஷ்மிகா அதிரடி ட்வீட்! 

விரைவில் தனது ரசிகர்களை சந்திப்பதாக நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார். 

DIN

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். சங்கீதா, ஷியாம், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  

பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா டிச.24ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சரத்குமார், ராஷ்மிகா மந்தனா, ஷாம் என பலர் கலந்து கொண்டனர். 

இந்த விழாவில் ராஷ்மிகா ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடினார். கில்லி படம் பார்த்து  நடிகர் விஜய்யின் ரசிகரானதாக கூறினார். அவருக்கு அரங்கம் நிரைந்த வரவேற்பு கிடைத்தது. பின்னர் இது குறித்து ராஷ்மிகா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: 

எங்களை சந்தித்ததற்கு நன்றி. உங்களது அன்பை உணர்கிறோம். இதை திருப்பி உங்களுக்கு தருவதற்கான ஒரு வழிதான் பாடல்கள். விரைவில் உங்களை ஆன்லைனிலாவது சந்திக்கிறேன். உங்களுடன் நேரம் செலவழிப்பது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ.87.58ஆக நிறைவு!

நூறு கோடி வானவில்... மாளவிகா மனோஜ்!

இதுவரை இல்லாத பேட்டரி திறன்... விவோ ஒய் 500 சிறப்புகள் என்ன?

மலையாளக் கவிதை... அனுமோள்!

'அவர் என்னுடைய அம்மாவே இல்லை' - பவுன்சரால் தூக்கிவீசப்பட்ட இளைஞர் விளக்கம்!

SCROLL FOR NEXT