செய்திகள்

செல்வராகவனுக்கு மீண்டும் விவாகரத்தா? வைரலாகும் புதிய ட்வீட்! 

இயக்குநர் செல்வராகவன் பதிவிட்டுள்ள புதிய ட்விட்டால் சர்சை எழுந்துள்ளது.  

DIN

இயக்குநர் செல்வராகவன் நடிகை சோனியா அகர்வாலை 2006இல் திருமணம் செய்து 2010இல் விவாகரத்து செய்தார். பின்னர் கீதாஞ்சலி ராமனை 2011இல் திருமணம் செய்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள்.

துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமானார். தற்போது மோகன் ஜி. இயக்கத்தில் பகாசூரன் படத்தில் நடித்துள்ளார். விரைவில் திரைக்கு வர உள்ளது. செல்வராகவன் ட்விட்டரில் அடிக்கடி பதிவிட்டு வருவார். இந்நிலையில் தற்போது, “தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது ? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும்” எனப் பதிவிட்டுள்ளார். 

இந்த பதிவுக்கு சிலர் ‘உண்மைதான்’ எனவும், சிலர்  ‘என்னாச்சி சார், நீங்களும் விவாகரத்து செய்யப்போறீங்களா?” என கேள்வி எழுப்பி வருகின்றனர். 

சமீபத்தில் இவரது தம்பியும் நடிகருமான தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்தார். இந்நிலையில், இவரது இந்த ட்வீட்டை வைத்து தனுஷைத் தொடர்ந்து இயக்குநர் செல்வராகவனும் விவாகரத்தா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புல்லட் பேபி.. கீர்த்தி ஷெட்டி!

பிக் பாஸ் வீட்டிற்குப் பொருந்தாதவர்கள்! குவியும் விமர்சனங்கள்!

எஸ்டிஆர் - 49 புரோமோ எப்போது?

தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை: பள்ளி வாயிலாக விண்ணப்பிக்கலாம்!

இந்தோனேசிய பள்ளிக் கட்டட விபத்து: 50 ஆக உயர்ந்த பலி!

SCROLL FOR NEXT