வெளியானது தனுஷின் 'மாறன்' டிரெய்லர்!
தனுஷின் மாறன் பட டிரெய்லர் வெளியானது.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள மாறன் திரைப்படம் வருகிற மார்ச் 11 ஆம் தேதி நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க, சமுத்திரக்கனி, ஜெயபிரகாஷ், கிருஷ்ணகுமார், ஸமிருதி வெங்கட், ராம்கி, மகேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க | 'வலிமை' எந்த ஓடிடியில், எப்பொழுது வெளியாகிறது தெரியுமா?
Advertisement
Advertisement
இந்தப் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. படத்தில் தனுஷ் பத்திரிகையாளராக நடித்துள்ளதாக தெரிகிறது. இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஜகமே தந்திரம் படத்தைத் தொடர்ந்து மாறன் திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகாமல் ஓடிடியில் வெளியாவது தனுஷ் ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.