முகப்பு
செய்திகள்

மாறனுக்காக இணைந்த அசுரன் கூட்டணி - தனுஷ் பாடிய முதல் பாடலை அறிவித்த ஜி.வி.பிரகாஷ்

மாறன் படத்தில் தனுஷ் பாடிய பாடல் குறித்து ஜி.வி.பிரகாஷ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

Updated On : 12 ஜனவரி 2022, 4:41 pm IST
பகிர்:

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள மாறன் திரைப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது. இந்தப் படம்  ஓடிடியில் நேரடியாக வெளியாகும் என்று கூறப்பட்டு வருகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் இந்தப் படம் குறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், மாறன் துவக்க பாடலின் ஒலி கலவை பணிகள் நடைபெற்று வருகிறது. விவேக் எழுதியுள்ள இந்தப் பாடலை தனுஷ் பாடியுள்ளார். மேலும் அறிவு இந்தப் பாடலின் ராப் பாடியுள்ளார். என்று குறிப்பிட்டுள்ளார். 

மாறன் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க, ஸ்மிருதி வெங்கட் சமுத்திகரகனி, கிருஷ்ண குமார், மகேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments