மோகன்லால் மகளின் துடக்கம் திரைப்பட டிரைலர்!
துடக்கம் திரைப்பட டிரைலர் வெளியானது...
நடிகர் மோகன்லாலின் மகள் விஸ்மயா நாயகியாக அறிமுகமாகும் துடக்கம் படத்தின் டிரைலர் வெளியானது.
நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் நடிகராக உள்ள நிலையில், தற்போது அவரின் மகள் விஸ்மயாவும் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகிறார்.
மோகன்லாலின் தயாரிப்பு நிறுவனமான ஆசிர்வாத் சினிமாஸ் தயாரிப்பில் 2018 படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசஃப் இயக்கிய இப்படத்திற்கு துடக்கம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படம் உலகம் முழுவதும் ஆக.7ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சஸ்பென்ஸ் திரில்லர் கதையாக உருவான இப்படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். டிரைலர் காட்சிகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுதுடன் சிறப்பு தோற்றத்தில் மோகன்லாலும் நடித்திருப்பது ஆவலைத் தூண்டுவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
The trailer for the film Thudakkam, marking the debut of actor Mohanlal's daughter Vismaya as a lead actress, has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.