செய்திகள்

10 கோடி பார்வைகளைக் கடந்தது ‘பேர் வச்சாலும்’ பாடல்

DIN

நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான ‘டிக்கிலோனா’ படத்தின் பாடல்களில் ஒன்றான ‘பேர் வச்சாலும்’ பாடல்  10 கோடிப் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர் சந்தானம் , அனேகா உள்ளிட்டோர் நடித்த ‘டிக்கிலோனா’ திரைப்படம் விமர்சன ரீதியாக  விமர்சிக்கப்பட்டாலும் அதில் இடம் பெற்ற ‘பேர் வச்சாலும்’ பாடல் இணையத்தில் கொண்டாடப்படுவதுடன் பெரிதாக வைரலானது.

1990 ஆம் ஆண்டு கமல் ஹாசன் நடிப்பில் வெளியான ‘மைக்கேல் மதன காமராஜன்’ திரைப்படத்தில் இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்த இப்பாடலை யுவன் சங்கர் ராஜா சிறிய மாற்றத்தை ஏற்படுத்தி 'டிக்கிலோனா’ படத்தில் பயன்படுத்தினார்.

பாடல் வரிகளுடன் நடனக்காட்சிகளும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன்,  தற்போது 10 கோடி முறைக்கு மேல் யூடியூப் பக்கத்தில் பார்க்கப்பட்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொன்மகள் வந்தாள்!

நூற்றாண்டு கண்ட ஆளுமைகள்

பேரரசின் சிதைவுகள்

தற்காலிக ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன்!

SCROLL FOR NEXT