செய்திகள்

மறுமணம் செய்யவிருக்கும் இசையமைப்பாளர் டி.இமான்: பெண் இவரா ?

DIN


இசையமைப்பாளர் டி.இமான் கடந்த வருடம் டிசம்பரில் தனது விவகாரத்து செய்தியை ஊடகங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அவர் தனது ட்விட்டர் பதிவில், கடந்த நவம்பர் 2020ல் நாங்கள் இருவரும் மனப்பூர்வமாக விவாகரத்து செய்துவிட்டதாக தெரிவித்திருந்தார்.  அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் இமான் தற்போது இரண்டாவது திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையை சேர்ந்த உமா என்பவரை இமான் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகவும், திருமணம் வருகிற மே மாதம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. 

மேலும் திருமணமானது, இருவீட்டார் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து விரைவில் டி.இமான் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

டி.இமான் இசையமைத்துள்ள சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரஷியாவுக்கான ஜொ்மனி தூதா் திரும்ப அழைப்பு

ரூ,7.50 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

தொரப்பள்ளியில் உலவிய காட்டு யானை

பெருந்துறை விவேகானந்த பள்ளி மாணவா்கள் 100 % தோ்ச்சி

வேளாளா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT