‘கட்டா குஸ்தி’ திரைப்பட டிரைலர் வெளியீடு
நடிகர்கள் விஷ்ணுவிஷால், ஐஸ்வர்யா லஷ்மி நடிப்பில் உருவாகியுள்ள கட்டா குஸ்தி திரைப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் சனிக்கிழமை வெளியிட்டனர்.
நடிகர்கள் விஷ்ணுவிஷால், ஐஸ்வர்யா லஷ்மி நடிப்பில் உருவாகியுள்ள கட்டா குஸ்தி திரைப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் சனிக்கிழமை வெளியிட்டனர்.
ராட்சசன், எஃப்ஐஆர் திரைப்படங்களுக்குப் பிறகு நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கட்டா குஸ்தி. இதில் அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லஷ்மி நடிக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் காளி வெங்கட், முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தை ரவி தேஜா, விஷ்ணு விஷால் இணைந்து தயாரித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தத் திரைப்படம் டிசம்பர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.