செய்திகள்

‘ஆன்லைனில் 60 லைக்குகள் வாங்குவது குறைவா? ’- ராஷி கண்ணா வியப்படைவது ஏன்? 

ராஷி கண்ணா - கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் சர்தார் படம் தீபாவளிக்கு வெளியாகிறது. 

DIN

'இமைக்கா நொடிகள்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ராஷி கண்ணா. தொடர்ந்து 'அடங்கமறு', 'அயோக்கியா', 'சங்கத் தமிழன்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். 

இதில் 'இமைக்கா நொடிகள்', 'அடங்க மறு' ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதனையடுத்து அவர் 'அரண்மனை 3', 'துக்ளக் தர்பார்' போன்ற வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளன. சுந்தர்.சி இயக்கியுள்ள 'அரண்மனை 3' படத்தின் புகைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. 

இதனையடுத்து அவர் தமிழில் கார்த்தியுடன் 'சர்தார்' மற்றும் 'மேதாவி' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சர்தார் பட புரமோஷனுக்காக கொச்சி சென்று இருந்தார். இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு வரும் 21ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிட்டத்தக்கது. 

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தின் ஸ்டோரியில், “சமூக வலைதளங்களில் 60 லைக்குகள் அதிகமில்லை என சமூக ஊடகம் உங்களை நம்ப வைத்துள்ளது. ஆனால் அதே 60 பேர் நேரில் வந்து உங்களை பாராட்டினால் பிரமித்து விடுவீர்கள்” என்ற பதிவினை பகிர்ந்து உள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிழலிலும் ஜொலிக்கற நிரந்தர ஒளி அவ... சான்யா மல்ஹோத்ரா!

53 கிலோ கோயில் நகைகள் ஸ்டேட் வங்கியில் முதலீடு!

டி20: தெ.ஆ. அணியை வீழ்த்தி வரலாறு படைத்தது நமீபியா..!

தீபாவளி வருகிறது! 70% சலுகையில் பட்டாசு என்ற விளம்பர மோசடி!

தீர்ப்பு எதிரொலி: முதுநிலை ஆசிரியர் தேர்வு தொடங்கியது!

SCROLL FOR NEXT