முகப்பு
செய்திகள்

'வெந்து தணிந்தது காடு' படத்துக்கு கிடைத்த வரவேற்பு குறித்து பதிவிட்ட ரஹ்மான்

வெந்து தணிந்தது காடு படத்துக்கு கிடைத்துவரும் வரவேற்பு குறித்து இசையமைப்பாளர் ரஹ்மான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

Updated On : 19 செப்டம்பர் 2022, 5:46 pm IST
பகிர்:

வெந்து தணிந்தது காடு படத்துக்கு கிடைத்துவரும் வரவேற்பு குறித்து இசையமைப்பாளர் ரஹ்மான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள 'வெந்து தணிந்தது காடு' படம் கடந்த 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. 

படத்தின் கதைக்கு இயக்குநர் கௌதம் மேனன் அளித்துள்ள முக்கியத்துவத்தை விமர்சகர்கள் பாராட்டிவருகின்றனர். ஒருசிலர் படம் மெதுவாக நகர்வதாகவும் குறை கூறிவருகின்றனர். 

சமீபத்தில் இந்தப் படத்துக்கு அளித்த வரவேற்புக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில் கலந்துகொண்ட சிம்பு, அடுத்த பாகத்தை ரசிகர்கள் விரும்பும் வகையில் சண்டைக்காட்சிகளுடன் உருவாக்குமாறு இயக்குநர் கௌதம் மேனனிடம் வேண்டுகோள்விடுத்தார். 

இதன் ஒரு பகுதியாக ட்வீட் செய்துள்ள ரஹ்மான், வெந்து தணிந்தது காடு படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்கு வரவேற்பு அளித்துவரும் பத்திரிகையாளர்கள், பார்வையாளர்கள், ரசிகர்கள் ஆகியோருக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.