நடிகர் சோனு சூட்டுக்கு கோல்டன் விசா வழங்கிய துபை
நடிகர் சோனு சூட்டுக்கு துபை அரசு கோல்டன் விசா வழங்கியுள்ளது.
நடிகர் சோனு சூட்டுக்கு துபை அரசு கோல்டன் விசா வழங்கியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளிநாடுகளை சேர்ந்த நடிகர்கள், நடிகைகள், தொழிலதிபர்கள், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோருக்கு நீண்ட கால குடியுரிமையை வழங்கும் நோக்கில் ‘கோல்டன் விசா’ என்ற சிறப்பு விசாவை அந்நாட்டின் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அறிமுகப்படுத்தினார்.
இதையும் படிக்க | இம்ரான் கானுக்கு எதிராக நாளை (ஏப்.9) நம்பிக்கையில்லா தீர்மானம்
Advertisement
Advertisement
இந்தியாவின் பல்வேறு திரைப்பிரபலங்களுக்கும் கோல்டன் விசா பெற்று வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகரான சோனு சூட்டுக்கு வெள்ளிக்கிழமை கோல்டன் விசா வழங்கப்பட்டது.
இதுகுறித்து பேசிய சோனு சூட், "கோல்டன் விசாவிற்காக துபை அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். துபை எனக்கு மிகவும் பிடித்தமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்” எனத் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.