லெஜண்ட் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள லெஜண்ட் திரைப்படத்தின் முதல் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள லெஜண்ட் திரைப்படத்தின் முதல் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
தனது கடை விளம்பரங்களின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் சரவணா ஸ்டோர்ஸ் சரவணன். இவர் தற்போது ஜேடி - ஜெர்ரி என்ற இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில் 'தி லெஜண்ட்' படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். சரவணனுக்கு ஜோடியாக ரித்திகா திவாரி என்பவர் நடிக்கிறார். மறைந்த நடிகர் விவேக் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் முதல் பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர்.
இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். அனல் அரசு சண்டைப்பயிற்சி இயக்குநராக பணிபுரிந்துள்ளார். பட்டுக்கோட்டை பிரபாகரன் இந்தப் படத்துக்கு வசனம் எழுத, இந்தப் படத்துக்கு வைரமுத்து, கபிலன், பா.விஜய், சினேகன், கார்க்கி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.
ராஜு சுந்தரம், பிருந்தா, தினேஷ் ஆகியோர் இந்தப் படத்தின் பாடல்களுக்கு நடன இயக்குநராக பணிபுரிந்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.