FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

பாலிவுட்டில் சாதனை படைத்த கேஜிஎஃப் 2 பட வசூல்

பாலிவுட்டில் ஐந்தே நாள்களில் ரூ. 200 கோடி வசூலித்த படம் என்கிற பெருமையை கேஜிஎஃப் 2 படம் பெற்றுள்ளது.

Updated On : 19 ஏப்ரல் 2022, 3:31 pm IST
பகிர்:

பாலிவுட்டில் ஐந்தே நாள்களில் ரூ. 200 கோடி வசூலித்த படம் என்கிற பெருமையை கேஜிஎஃப் 2 படம் பெற்றுள்ளது.

யாஷ் நடிப்பில் 2018-ல் வெளியான கேஜிஎஃப் என்கிற கன்னடப் படம் இந்திய அளவில் கவனம் பெற்றது. மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. பிரஷாந்த் நீல் இயக்கியிருந்தார். 

கேஜிஎஃப் படத்தின் 2-ம் பாகம் தற்போது வெளியாகியுள்ளது. யாஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ் போன்றோர் நடித்துள்ளார்கள். கேஜிஎஃப் 2 படம் கன்னடம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. 

Advertisement

Advertisement

கேஜிஎஃப் 2 படம் முதல் நாளன்று ரூ. 134.5 கோடி வசூலித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. 

மேலும், இதன் ஹிந்திப் பதிப்பு புதிய சாதனையைப் படைத்து வருகிறது. இதற்கு முன்பு 2019-ல் ஹிருத்திக் ரோஷன், டைகர் ஷெராஃப் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கிய வார் படம், முதல் நாளன்று ரூ. 51.60 கோடி வசூலித்ததே சாதனையாக இருந்தது. கேஜிஎஃப் 2 ஹிந்திப் பதிப்பு அதன் சாதனையை உடைத்து முதல் நாளன்று ரூ. 53.95 கோடி வசூலித்து புதிய வரலாறு படைத்தது. 

கேஜிஎஃப் 2 படம் தற்போது இன்னொரு சாதனையை நிகழ்த்தியுள்ளது. இதன் ஹிந்திப் பதிப்பு ஐந்து நாள்களில் ரூ. 200 கோடி வசூலைத் தாண்டியுள்ளது. நேற்று வரை கேஜிஎஃப் 2 ஹிந்திப் பதிப்பு மட்டும் இந்தியாவில் ரூ. 220 கோடியை வசூலித்துள்ளது. பாகுபலி 2 படம் ஆறாவது நாளன்று தான் இந்தியாவில் இந்த இலக்கை எட்டியது. ஆனால் கேஜிஎஃப் 2 ஐந்தாவது நாளிலேயே ரூ. 200 கோடி இலக்கை எட்டி புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. 

மேலும் கேஜிஎஃப் 2 படம் முதல் நான்கு நாள்களில் உலகளவில் ரூ. 546 கோடி வசூலித்ததாகப் படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments