சிம்பு - ஹன்சிகாவின் 'மஹா' எப்படி இருக்கிறது? - பிரபல நடிகர் விமர்சனம்
நடிகர் சிம்பு மற்றும் ஹன்சிகா இணைந்து நடித்துள்ள மஹா திரைப்படம் தொடர்பாக நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷின் ட்விட்டர் பதிவு வைரலாகிவருகிறது.
நடிகர் சிம்பு மற்றும் ஹன்சிகா இணைந்து நடித்துள்ள மஹா திரைப்படம் தொடர்பாக நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷின் ட்விட்டர் பதிவு வைரலாகிவருகிறது.
ஹன்சிகா முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் 'மஹா' திரைப்படம் வருகிற மே மாதம் 27 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. ஹன்சிகாவின் 50வது படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகர் சிம்பு சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார்.
இதையும் படிக்க | மீண்டும் தள்ளிப்போனது விஜய் சேதுபதியின் 'மாமனிதன்' - தயாரிப்பாளர் சொன்ன காரணம்
Advertisement
Advertisement
இந்தப் படத்தை எட்செட்ரா எண்டர்டெயின்மென்ட் சார்பாக மதியழகன் தயாரிக்க, யு.ஆர்.ஜமீல் இந்தப் படத்தை எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த், கருணாகரன், தம்பி ராமையா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இந்தப் படம் தொடர்பாக நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், ''சிம்பு படத்தில் இணைவதில் மகிழ்ச்சி. மஹா படத்தை நேற்று பார்த்தேன். சிறப்பான படம். குடும்ப ரசிகர்கள் மற்றும் 100 சதவிகித இளைஞர்களுக்கான படம். படத்தில் ஹன்சிகாவின் நடிப்பு சிறப்பாக இருந்தது. படக்குழுவுக்கு வாழ்த்துகள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.