இந்தியன் 2-ல் தீபிகா படுகோன்?
’இந்தியன் 2’ திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
’இந்தியன் 2’ திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவந்த இந்தியன் 2 படம் விபத்து உள்ளிட்ட காரணங்களால் பாதியில் நிற்கிறது. தயாரிப்பு தரப்பு மற்றும் நடிகர்கள் பிரச்னையால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ரூ.400 கோடி வசூலைத் தாண்டியதால் தற்போது ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் பணிகளை மீண்டும் துவங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
அதில் ஒரு பகுதியாக, முதலில் காட்சிப்படுத்தப்பட்ட படப்பிடிப்பில் பங்குபெற்ற நடிகர் விவேக் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். காஜல் அகர்வாலுக்கு திருமணம் முடிந்து குழந்தையும் பிறந்துவிட்டது.
அதனால், படத்தின் நாயகியாக பிரபல ஹிந்தி நடிகை தீபிகா படுகோனிடன் இயக்குநர் ஷங்கர் தரப்பிலிருந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஷங்கர் தற்போது ராம் சரண் நடிக்கும் தெலுங்கு படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. முதன்முறையாக ஷங்கர் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். இந்தப் படத்துக்கு பிறகு இந்தியன் 2 படத்தை ஷங்கர் துவங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.