முகப்பு
செய்திகள்

கடலுக்கு அடியே 100 அடி ஆழத்தில் பேனர் வைத்த அஜித் ரசிகர்கள் - வைரலாகும் விடியோ

நடிகர் அஜித்தின் ரசிகர்கள் 100 அடி ஆழத்தில் கடலுக்கு அடியே பேனர் வைத்துள்ளனர். 

Updated On : 6 ஆகஸ்ட் 2022, 11:56 am IST
பகிர்:

நடிகர் அஜித்தின் ரசிகர்கள் 100 அடி ஆழத்தில் கடலுக்கு அடியே பேனர் வைத்துள்ளனர். 

நடிகர் அஜத் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே தனது ரசிகர் மன்றத்தை கலைத்துவிட்டார். தன் படங்கள் வெளியாகும்போது மட்டும் ரசிகர்கள் வந்து பார்த்தால் போதும் என்பது அவரது நிலைப்பாடு. 

கடந்த சில மாதங்களுக்கு முன் தன்னை தல என்றோ, அல்டிமேட் ஸ்டார் என்றோ அழைக்க வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டார். இருப்பினும் அவரது ரசிகர்கள் அடங்குவதாய் இல்லை. 

Advertisement

Advertisement

சமீபத்தில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்துகொள்ள நடிகர் அஜித் திருச்சி வந்தபோது பெரும் கூட்டம் கூடியது. ரசிகர்கள் முன் தோன்றி கையசைத்து அவர்களை அமைதிப்படுத்தினார். 

இந்த நிலையில் அஜித் ரசிகர்கள் கடலுக்கு அடியில் 100 அடி ஆழத்தில் அவரது பேனரை வைத்து அசத்தியுள்ளனர். நடிகர் அஜித் திரையுலகில் அடியெடுத்து வைத்து 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் அதனைக் கொண்டாடும் விதமாக புதுச்சேரி ரசிகர்கள் பேனர் வைத்துள்ளனர். தற்போது இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments