சமீபத்தில் திரையரங்கில் வெளியான படம் பற்றி சிவகார்த்திகேயன் கருத்து - வைரலாகும் விடியோ
சமீபத்தில் திரையரங்கில் வெளியான படம் குறித்து சிவகார்த்திகேயன் பேசிய விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் திரையரங்கில் வெளியான படம் குறித்து சிவகார்த்திகேயன் பேசிய விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சிவகார்த்திகேயன் எப்பொழுதும் நல்ல படங்களைப் பாராட்டத் தவறுவதில்லை. அந்த வகையில் ஆமிர் கானின் 'லால் சிங் சத்தா' படம் பார்த்த சிவகார்த்திகேயன் ஊடகங்களின் முன்பாக தனது கருத்துக்களைப் பதிவு செய்திருந்தார்.
அந்த வகையில் அருள் நிதியின் 'டைரி' படம் பார்த்த சிவகார்த்திகேயன் தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளார். டைரி படம் குறித்து அவர் பேசியதாவது, ''கடைசி பத்து நிமிடங்களை என்னால் கணிக்க முடியவில்லை. எனக்கு மிகவும் பிடித்தது அந்த காட்சிகள்தான். அந்த அளவுக்கு மிகக் கோர்வையாக அந்தக் காட்சிகளை உருவாக்கியிருந்தார்கள்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | 'ஊ சொல்றியா ?' - விஜய் டிவியில் புதிய நிகழ்ச்சி
இந்த மாதிரி கதையை எழுதுவது எவ்வளவு கடினமோ, அதனை எடுப்பது அதனை விட கடினம். எல்லோரின் பங்களிப்பும் சரியாக இருந்தால்தான் ஒரு நல்ல திரில்லர் படத்தை உருவாக்க முடியும்.
திரில்லர் ஸ்பெஷலிஸ்ட் என்ற பெயரை அருள்நிதிக்கு கொடுக்கலாம். இந்த மாதிரி கதையை அவர் சரியாக தேர்ந்தெடுக்கிறார். அவரது வெற்றிபெற்ற திரில்லர் படங்களின் வரிசையில் டைரியும் இடம் பிடிக்கும்'' என்றார்.
இந்த விடியோவை இயக்குநர் இன்னாசி பாண்டியன் பகிர்ந்து சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.