விஷாலின் ’லத்தி’ டிரைலர் குறித்து அறிவிப்பு
லத்தி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லத்தி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘வீரமே வாகை சூடும்’ படத்தக்கு பிறகு லத்தி என்ற படத்தில் விஷால் நடித்துவருகிறார். இந்தப் படத்தை நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா இருவரும் இணைந்து தயாரித்து வருகின்றனர். வினோத் குமார் இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.
யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். விஷால் போலீஸாக நடித்துவரும் இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: வெளியானது ‘இரவின் நிழல்’ மேக்கிங் விடியோ!
லத்தி திரைப்படம் முதலில் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருந்தது. பின்னர், சில பிரச்னைகள் காரணமாக படம் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது, இப்படத்தின் டிரைலர் வருகிற டிச.12 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படம் டிசம்பர் மாதம் 22ஆம் தேதி கிறிஸ்துமஸை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.