FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

‘சில்லா சில்லா’ பாடலுக்கு சிறுமியின் நடனம்: வைரல் விடியோ!

துணிவு படத்திலிருந்து வெளியான ‘சில்லா சில்லா’ பாடல் யூடியூபில் புதிய சாதனை படைத்துள்ளது. 

6 பிப்ரவரி 2024, 6:21 pm IST
பகிர்:

நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ள படம் 'துணிவு'. பஞ்சாபில் நடைபெற்ற வங்கி்க் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. 

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

‘சில்லா சில்லா’ பாடல் டிச. 9 ஆம் தேதி வெளியானது. இப்பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். பாடல் வெளியானதை அஜித் ரசிகர்கள் இணையதளங்களில் கொண்டாடி வருகின்றனர். 

Advertisement

Advertisement

இந்நிலையில் சிறுமி இந்தப் பாடலுக்கு ஆடிய விடியோ வைரலாகி வருகிறது. மேலும் இந்தப் பாடல் உலகளவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட விடியோ என்ற சாதனையை படைத்துள்ளது. தற்போது 1.3 கோடி (13 மில்லியன்) பார்வையாளர்களை கடந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments