முகப்பு
செய்திகள்

மாற்றுத் திறனாளி ரசிகரை தூக்கிய நடிகர் விஜய்! வைரல் புகைப்படம்

தன்னை சந்திக்க வந்த மாற்றுத் திறனாளி ரசிகரை தூக்கி புகைப்படம் எடுத்துக்கொண்டார் நடிகர் விஜய்.

Updated On : 13 டிசம்பர் 2022, 5:50 pm IST
பகிர்:

தன்னை சந்திக்க வந்த மாற்றுத் திறனாளி ரசிகரை தூக்கி புகைப்படம் எடுத்துக்கொண்டார் நடிகர் விஜய்.

நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படத்திற்கு பிறகு பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் வாரிசு வெளியாகவுள்ள நிலையில், விழாக்காலங்களில் நேரடித்தெலுங்குத் திரைப்படங்களுக்கு மட்டுமே ஆந்திரத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, கடந்த நவம்பர் மாதம் முதல்கட்டமாக நடிகர் விஜய் தனது ரசிகர்களை சென்னை புறநகர் பகுதியில் உள்ள பனையூர் விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் சந்தித்தார். அதில், நாமக்கல், சேலம், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகளை சந்தித்தார்.

இரண்டாவது கட்டமாக இன்று செங்கல்பட்டு, அரியலூர், கடலூர், திண்டுக்கல் மாவட்டங்களின் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்தார். இவர்களுக்கு மதிய உணவாக மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது.

ரசிகர்களை சந்திக்க கருப்பு நிற உடையில், புதிய ஹேர்ஸ்டைலுடன் வந்த விஜய்யை பார்த்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

இந்நிலையில், அங்கு வந்த மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவரை நடிகர் விஜய் தன் கைகளால் தூக்கி புகைப்படம் எடுத்துக்கொண்டார். தற்போது, இது வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments