முகப்பு
செய்திகள்

சீரியலிலிருந்து விலகுகிறேன்: 'பாக்கியலட்சுமி' நடிகை திவ்யா கணேஷ்

'செல்லம்மா' தொடரிலிருந்து விலகுவதற்கான காரணம் குறித்து நடிகை திவ்யா கணேஷ் மனம் திறந்துள்ளார். இவர் தற்போது 'பாக்கியலட்சுமி' தொடரில் நடித்து வருகிறார். 

Updated On : 20 டிசம்பர் 2022, 3:58 pm IST
திவ்யா கணேஷ்
பகிர்:

'செல்லம்மா' தொடரிலிருந்து விலகுவதற்கான காரணம் குறித்து நடிகை திவ்யா கணேஷ் மனம் திறந்துள்ளார். இவர் தற்போது 'பாக்கியலட்சுமி' தொடரில் நடித்து வருகிறார். 

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தொடர் 'பாக்கியலட்சுமி'. இந்த தொடர் ஒளிபரப்பான ஆரம்பம் முதலே டிஆர்பியில் முதன்மை இடத்தை வகித்து வருகிறது. இந்த தொடரில் ஜெனிபர் கதாபாத்திரத்தில் நடிகை திவ்யா கணேஷ் நடித்து வருகிறார்.

இவர் 'லட்சுமி வந்தாச்சு', 'சுமங்கலி' போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'கேளடி கண்மணி' தொடர் மூலம் தான் மக்கள் மத்தியில் அறிமுகமானார். தற்போது 'பாக்கியலட்சுமி' தொடர் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுள்ளார். 

Advertisement

Advertisement

நடிகை திவ்யா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'செல்லம்மா' என்ற தொடரிலும் மேகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த தொடரிலிருந்து சமீபத்தில் திவ்யா விலகினார். 

அவர் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக 'செல்லம்மா' தொடரிலிருந்து விலகியதாக கூறப்பட்டது. இதனிடையே இதற்கு மறுப்பு தெரிவித்து விடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார் நடிகை திவ்யா. 

அதில், என்னுடைய சொந்த பிரச்சனையால் நான் அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டதாக சொல்கிறார்கள். ஆனால் நான் அப்படி சொல்ல மாட்டேன். என்னுடைய சொந்த விஷயத்தினால் நான் வெளியேறவில்லை. என்னை அங்கே சிலர் வேலை செய்ய விடாமல் சிலர் தொந்தரவு செய்வதால் தான் இந்த சீரியலில் இருந்து விலகுகிறேன் எனத் தெரிவித்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments