FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

முதல் டெஸ்ட்டில் மூன்று இடதுகை சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குகிறதா இந்திய அணி?

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்திய அணி மூன்று இடதுகை சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 4:16 pm IST
இந்திய அணி வீரர்கள் - படம் | பிசிசிஐ
பகிர்:

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்திய அணி மூன்று இடதுகை சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தியா - இலங்கை இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 15) முதல் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி காலே திடலில் நடைபெறுகிறது.

இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்திய அணி மூன்று இடதுகை சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கலாம் என்பதைக் குறிக்கும் விதமாக இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் பேசியுள்ளார்.

Advertisement

Advertisement

இது தொடர்பாக அவர் பேசியதாவது: அணியில் குல்தீப் யாதவ் இருக்கிறார். அவரது அனுபவம் அணிக்கு மிகுந்த உதவியாக இருக்கும். மானவ் சுதர் பந்தினை அதிகம் திருப்பக் கூடியவர். ரவீந்திர ஜடேஜா துல்லியமாக பந்துவீசும் திறன் கொண்டவர். அதனால், மூன்று சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கினாலும், அது எங்களுக்கு பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தாது. கேப்டன் ஷுப்மன் கில் எப்படி இவர்கள் மூவரையும் பயன்படுத்தப் போகிறார் என்பதைப் பார்க்க வேண்டும். திறமையின் அடிப்படையில் பார்த்தால், இவர்களால் அணிக்கு 20 விக்கெட்டுகளையும் கைப்பற்றி கொடுக்க முடியும்.

காலே ஆடுகளத்தில் விளையாடிய போட்டிகளில் அணிகள் வழக்கமாக மூன்று சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியிருக்கின்றன. ஆடுகளத்தில் தன்மையும் பார்ப்பதற்கு நன்றாக உள்ளது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் வீரர்கள் சிறப்பாக செயல்பட தங்களை மனதளவில் தயார் செய்துகொள்ள வேண்டும் என்றார்.

summary

It is reported that the Indian team is likely to field three left-arm spinners in the first Test against Sri Lanka.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments