FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

மன்னிப்பு, தனியுரிமை... முன்னாள் மனைவியின் குற்றச்சாட்டுக்கு ஆஷ்லி கார்ட்னர் விளக்கம்!

ஆஸ்திரேலிய மகளிர் அணியின் துணை கேப்டன் ஆஷ்லி கார்ட்னர் தன் மீதான சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ளது பற்றி...

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 4:21 pm IST
ஆஷ்லி கார்ட்னர் - படம்: இன்ஸ்டா / ஆஷ்லி கார்ட்னர்.
பகிர்:

ஆஸ்திரேலிய மகளிர் அணியின் துணை கேப்டன் ஆஷ்லி கார்ட்னர் (29 வயது) தன் மீதான சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில் முன்னாள் மனைவியிடம் மன்னிப்பும் தனியுரிமையை மதிக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.

சமீபத்தில் ஆஷ்லி கார்ட்னர் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் அணியில் இருக்கும் சக வீராங்கனையுடன் உறவில் இருப்பதாகவும் அவரது நட்புமுறிவுற்ற மனைவி மோனிகா ரைட் குற்றம் சுமத்தியது பேசுபொருளானது.

ஆஷ்லி கார்ட்னர் கடந்த 2020ல் மோனிகா ரைட் உடன் பழக ஆரம்பித்து, 2024ல் நிச்சயதார்த்தம் நடந்து, 2025ல் திருமணம் செய்துகொண்டனர். பின்னர், நவம்பர் 2025ல் பிரிந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

பின்னர், ஆஷ்லி கார்ட்னர் சக வீராங்கனை ஜார்ஜியா ஹோல் (22 வயது) உடன் உறவில் இருப்பதகாக் கூறப்படுகிறது. இதனை மோனிகா ரைட் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்த நிலையில், இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆஷ்லி கார்ட்னர் தனது இன்ஸ்டா பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

எனது மனைவியைப் பிரிந்தது என்பது என் தனிப்பட்ட விஷயம். நான் கிரிக்கெட் ஆஸ்திரேலியா எனக்கு துணை கேப்டன் என்ற பதவியை அளித்துள்ளதால் என்னுடைய தற்போதைய உறவு குறித்து தெளிவுப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா எனது பதவியைத் தொடர ஆதரவு அளித்துள்ளதற்கு நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன். அணியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நான் வலுவான பங்களிப்பை அளிக்க முயல்வேன். இந்த சீசனில் எனது அணி வெல்ல முழுமையான ஆதரவை அளிப்பேன்.

மோனிகாவுடன் பகிர்ந்துகொண்ட வாழ்க்கைக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். இந்த வலியை ஏற்படுத்தியதுக்கு மன்னிக்க வேண்டுகிறேன். அவருக்கு வருங்காலத்தில் மகிழ்ச்சி உண்டாக வேண்டிக்கொள்கிறேன்.

இது குறித்து இனிமேல் பொதுவெளியில் எந்தவிதமான கருத்தும் கூறமாட்டேன். இதில் சம்பந்தப்பட்டவர்களின் தனியுரிமையை மதிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

summary

Ashleigh Gardner breaks silence as ex-wife's cheating allegations pile pressure on Cricket Australia: ‘Respect privacy’

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments