’வாரிசு’ இசை வெளியீட்டு விழா.. ஒரு டிக்கெட் விலை இவ்வளவா?
வாரிசு இசை வெளியீட்டு விழா டிக்கெட் விலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
வாரிசு இசை வெளியீட்டு விழா டிக்கெட் விலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். குஷ்பு, சங்கீதா, ஷியாம், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மறுநாள்(டிசம்பர் 24) மாலை 4 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | கிண்டல் செய்த நடிகைக்கு நயன்தாரா பதிலடி
நடிகர் விஜய் படத்தின் பாடல் வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடைபெறும். அதில், விஜய்யின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும்.
வழக்கமாக, விழாவில் கலந்துகொள்வதற்கான டிக்கெட்கள் ரசிகர் மன்றம், பத்திரிகையாளர்கள், படக்குழுவினர் ஆகியோருக்கு வழங்கப்படும். இந்நிலையில், வாரிசு இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள ஒரு டிக்கெட்டிற்கு ரூ.4,000 வரை சிலர் வசூலிக்கப்பதாக இணையத்தில் சர்ச்சை வெடித்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக கரோனா காரணமாக பிரமாண்ட நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால், விஜய் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெறாததால், விஜய்யின் பேச்சை கேட்க அவரின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.