முகப்பு
செய்திகள்

சிம்புவின் ‘பத்து தல’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ‘பத்து தல’ திரைபடத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 31 டிசம்பர் 2022, 11:06 am IST
பகிர்:

கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெற்றிபெற்ற மஃப்டி திரைப்படம் தமிழில் சிம்பு நடிப்பில் பத்து தல என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுவருகிறது. இந்தப் படத்தை 'சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்குகிறார். 

கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். 

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்நிலையில் படக்குழு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. கௌதம் கார்த்திக் பெயருடன் சிம்புவின் பெயரும் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது. 

Advertisement

Advertisement

உலகமெங்கும் இந்தத் திரைப்படம் 2023ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் நாள் வெளியாகுமென படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments