'விடுதலை' படப்பிடிப்பு நிறைவு: ரிலீஸ் எப்போது?
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
‘அசுரன்’ திரைப்படத்திற்கு பின் இயக்குநர் வெற்றிமாறன் எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையை மையமாக வைத்து ‘விடுதலை’ என்கிற தலைப்பில் புதிய படத்தை இயக்கி வந்தார்.
இப்படத்தில் நடிகர் சூரி நாயகனாகவும் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள். இளையராஜா இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும், பீட்டர் ஹெய்ன் சண்டைப் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளனர்.
இந்நிலையில், இரண்டு பாகங்களாக வெளியாகும் விடுதலை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement
இப்படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் ரிலீஸ் தேதியை அறிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.