நடிகர் விஜய், தெலுங்கு இயக்குநருடன் இணைவதற்கு கீர்த்தி சுரேஷ் காரணமா?
தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பதற்கு கீர்த்தி சுரேஷ் ஒரு காரணம் என தகவல் பரவி வருகிறது.
நடிகர் விஜய் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜு தயாரிக்கிறார்.
இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிப்பதற்கு கீர்த்தி சுரேஷ் ஒரு காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் தில் ராஜுவிற்கு நடிகர் விஜய் நடிக்கும் படத்தை தயாரிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்திருக்கிறது.
இதையும் படிக்க | மீறினால் கடும் நடவடிக்கை: ரசிகர்களை எச்சரித்த இயக்குநர் ஷங்கர் - ராம் சரண் படக்குழு
Advertisement
Advertisement
இதனையடுத்து தில் ராஜு, நடிகை கீர்த்தி சுரேஷ் மூலம் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய கேட்டிருக்கிறார். இதனயைடுத்து விஜய் தரப்பில் கீர்த்தி சுரேஷ் பேச, அதன் பிறகு இருவரது சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. நடிகர் விஜய்யுடன் பைரவா, சர்கார் ஆகிய இரண்டு படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.