சிகிச்சையில் இருக்கும் பாட்டிக்கு மருந்தாகும் 'பீஸ்ட்' அரபிக் குத்து பாடல்: வைரலாகும் விடியோ
மருத்துவ சிகிச்சையில் இருக்கும் பாட்டி பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடலை ரசிக்கும் விடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்திலிருந்து சிவகார்த்திகேயன் எழுதி, அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி ஆகியோர் பாடிய அரபிக் குத்து பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்தப் பாடல் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாட்டி ஒருவர் அரபிக் குத்து பாடலை ரசிக்கும் விடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க | இந்தோனேசிய மொழியில் ரீமேக்காகும் முதல் தமிழ் படம்
Advertisement
Advertisement
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கியுள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. இந்தப் படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.