இசையமைப்பாளர் தமனுக்கு கரோனா
இசைமைப்பாளர் தமனுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அல வைக்குந்தபுரமுலோ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு கடந்த 2 வருடங்களாக தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு தமன் தான் இசையமைப்பாளர்.
தமிழில் நடிகர் விஜய் படம், சிவகார்த்திகேயன் படம் என அடுத்தடுத்து ஒப்பந்தமாகி வருகிறார். இந்த நிலையில் அவர் தனக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | பெண் குழந்தைக்கு அம்மாவான சின்னத்திரை நடிகை நீலிமா
Advertisement
Advertisement
சமீபத்தில் சிவகார்த்திகேயனின் 20வது படத்துக்காக அவரை இசையமைப்பாளர் தமன் சந்தித்திருந்ததாக புகைப்படம் பகிர்ந்திருந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது இயக்குநர் அனுதீப், நடிகர் நவீன் பொலிஷெட்டி உடனிருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.