பிரபல நடிகருக்கு ஜோடியாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை? ; அதிகாரப்பூர்வ தகவல்
பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லையாக நடித்து கவனம் ஈர்த்த காவ்யா அறிவுமணி ரிப்பப்பரி படத்தில் நடிக்கிறார்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவின் மறைவுக்கு பிறகு புதிய முல்லையாக களமிறங்கினார் காவ்யா அறிவுமணி. துவக்கத்தில் அவரை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் பின்னர் அவரது நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்தது.
இந்த நிலையில் காவ்யா அறிவுமணி திரைப்படத்தில் நடித்து வருகிறார். மகேந்திரன் கதாநாயகனாக நடிக்கும் படமான ரிப்பப்பரி படத்தில் தான் காவ்யா அறிவுமணி நடிக்கிறார். இந்தப் படத்தில் அவர் மகேந்திரனுக்கு ஜோடியாக நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் நடிப்பதற்கு முக்கியத்துவம் உள்ள வேடமாம்.
இதையும் படிக்க | தென்னிந்திய நடிகர்கள் குறித்து கங்கனா அதிரடி கருத்து: ஹிந்தி ரசிகர்கள் அதிர்ச்சி
Advertisement
Advertisement
இந்தப் படத்தை ஏகே இயக்குகிறார். மேலும் இந்தப் படத்தில் யூடியூப் பிரபலம் மாரி, சூப்பர் டிலக்ஸ் நோபிள் ஜேம்ஸ், நக்கலைட்ஸ் செல்லா மற்றும் தனம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு திவாகரா தியாகராஜன் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் மகேந்திரனுக்கு ஜோடியாக ஆரத்தி என்ற புதுமுகம் நடிக்கிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.