முகப்பு
செய்திகள்

'ஆமா நான் காதலிக்கிறேன், பொண்ணு...' - அதிரடியாக அறிவித்த விஷால்

சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் காதலித்துவருவதாக விஷால் அதிரடியாக அறிவித்துள்ளார். 

Updated On : 7 ஜூலை 2022, 6:25 pm IST
பகிர்:

சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் காதலித்துவருவதாக விஷால் அதிரடியாக அறிவித்துள்ளார். 

நடிகர் விஷால் தற்போது நடிகர்கள் ரமணா  மற்றும் நந்தா தயாரிக்கும் லத்தி படத்தில் நடித்துவருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை வினோத் குமார் இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 

படப்பிடிப்பில் காயம்

Advertisement

Advertisement

இந்தப் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பின்போது நடிகர் விஷாலுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது எடுக்கப்பட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகின்றன. தொடர்ந்து படப்பிடிப்பு இருப்பதால் நடிகர் விஷால் தற்காலிகமாக சிகிச்சை எடுத்துக்கொண்டார்.

பின்னர் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்துவருகிறார். இதற்கு முன்பு சண்டைக் காட்சி படமாக்கப்பட்டபோதும் நடிகர் விஷாலுக்கு காயம் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

அரசியலில் விஷால்?

நடிகர் விஷால் ஆந்திர மாநிலத்தில் உள்ள குப்பம் தொகுதியில் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக களமிறங்கவிருப்பதாக தகவல்கள் வெளியானது. அந்தத் தொகுதியில் தமிழர்கள் அதிகம் வசிப்பதால் நடிகர் விஷாலை நிறுத்த திட்டமிடப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அந்தத் தகவலை விஷால் மறுத்தார். 

நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக இருக்கும் விஷால், நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பின்பே தனக்கு திருமணம் என்று கூறிவந்தார்.

இந்த நிலையில் நடிகர் விஷாலுக்கும் ஹைதராபாத்தை சேர்ந்த அனிஷா ரெட்டி என்பவருக்கும் கடந்த 2019 ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் காரணம் ஏதும் சொல்லாமல் திருமணம் நிறுத்தப்பட்டது. 

மேலும் நடிகை வரலட்சுமி மற்றும் லட்சுமி மேனனுடன் காதல் என நடிகர் விஷால் கிசு கிசுக்கப்பட்டார். ஆனால் அவை வெறும் வதந்தியாக மட்டுமே இருந்துவருகிறது. 

காதல் திருமணம் ?

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் திருமணம் குறித்து நடிகர் விஷால் பேசியுள்ளார். தனக்கு பெற்றோர்களால் முடிவு செய்யப்படும் திருமணம் ஒத்துவராது என தெரிவித்த அவர், தான் ஒரு பெண்ணை காதலித்துவருவதாக அதிரடியாகக் கூறினார். பெண் யார் என்பதை விரைவில் அறிவிப்பேன் என அவர் தெரிவித்தார். 

லத்தி படத்துக்கு பிறகு விஷால் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் மார்க் ஆண்டனி படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments