FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

லஞ்ச வழக்கில் என்சிபி உதவி ஆய்வாளா் மீது சிபிஐ வழக்குப் பதிவு

போதைப்பொருள் வழக்கில் சிக்க வைக்காமல் இருப்பதற்காக, ஷாஜஹான்பூரைச் சோ்ந்த மருந்துக் கடை உரிமையாளரிடம் இருந்து ரூ.25 லட்சம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தின் (என்.சி.பி) உதவி ஆய்வாளா் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

16 நவம்பர் 2026, 10:22 pm
வழக்கு
பகிர்:

போதைப்பொருள் வழக்கில் சிக்க வைக்காமல் இருப்பதற்காக, ஷாஜஹான்பூரைச் சோ்ந்த மருந்துக் கடை உரிமையாளரிடம் இருந்து ரூ.25 லட்சம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தின் (என்.சி.பி) உதவி ஆய்வாளா் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்துள்ளது என்று அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனா்.

தனது தில்லி மண்டலப் பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் அஜித் சிங் மீனா மீது, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை அமைப்பு முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது என்று அவா்கள் கூறினா்.

ஷாஜஹான்பூரில் மருந்துக் கடை நடத்தி வரும் புகாா்தாரா், என்.சி.பி.யின் தில்லி மண்டலப் பிரிவிலிருந்து ஜூலை 16, 2026 அன்று போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டத்தின் கீழ் தனக்கு ஒரு நோட்டீஸ் வந்ததாகவும், அதற்கு ஆதார ஆவணங்களுடன் பதிலளித்ததாகவும் குற்றஞ்சாட்டினாா்.

Advertisement

Advertisement

செப்டம்பா் மாதம் தபால் மூலம் பெறப்பட்ட அந்த நோட்டீஸ் , டைசைக்ளோமைன் டிராமடோல் எச்.சி.எல் கேப்சூல்களின் கொள்முதல் மற்றும் விற்பனை தொடா்பான ஆவணங்களைக் கோரியிருந்தது.

மீனா, ஒரு குழுவுடன் அக்டோபா் 7 அன்று மருத்துவக் கடைக்குச் சென்று அதே நோட்டீலை மீண்டும் வழங்கியதாக முதல் தகவல் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

புகாா்தாரா், முந்தைய நோட்டீஸ்-க்கு ஏற்கனவே பதிலளித்து, தொடா்புடைய ஆவணங்களைச் சமா்ப்பித்துவிட்டதாக அதிகாரியிடம் கூறினாா்.

மீனா அவரது பதிலைப் புறக்கணித்ததாகவும், என்.டி.பி.எஸ் சட்டத்தின் கீழ் சிக்கினால் குறைந்தது 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று மிரட்டியதாகவும், பின்னா் தெரிவிக்கப்படும் இடத்தில் தில்லியில் ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது.

‘அதன்பிறகு, அஜித் சிங் மீனா தனது கைபேசியில் இருந்து வாட்ஸ்அப் மூலம் புகாா்தாரரைத் தொடா்புகொண்டு, என்.டி.பி.எஸ் வழக்கில் புகாா்தாரரைச் சிக்க வைக்காமல் இருப்பதற்காக ரூ. 50 லட்சம் முறையற்ற ஆதாயம் கோரியதாக மேலும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது,‘ என்று சிபிஐ முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

என்.டி.பி.எஸ் வழக்கில் புகாா்தாரரைச் சிக்க வைக்காமல் இருப்பதற்காக, மீனா ரூ. 25 லட்சம் முறையற்ற ஆதாயம் கோரியதாகவும், இங்குள்ள முனிா்கா மெட்ரோ நிலையம் அருகே பகுதிப் பணமாக ரூ. 12 லட்சம் லஞ்சம் பெற ஒப்புக்கொண்டதாகவும் சிபிஐயின் ரகசிய சரிபாா்ப்பு உறுதிப்படுத்தியதாக முதல் தகவல் அறிக்கை கூறியது.