FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

கலாய்த்த கார்த்தி: த்ரிஷா சொன்ன பதில் என்ன தெரியுமா?

பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்துள்ள திரிஷாவை நடிகர் கார்த்தி கிண்டலடித்த நிலையில் நடிகை த்ரிஷா பதிலளித்துள்ளார்.

Updated On : 7 ஜூலை 2022, 9:39 pm IST
த்ரிஷா
பகிர்:

பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்துள்ள திரிஷாவை நடிகர் கார்த்தி கிண்டலடித்த நிலையில் நடிகை த்ரிஷா பதிலளித்துள்ளார்.

பொன்னியின் செல்வன் படம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் டீசர் நாளை(ஜூலை 8) பிரம்மாண்டமாக வெளியாகிறது.  முன்னதாக ஆதித்த கரிகாலனாக நடித்துள்ள விக்ரம், வந்தியத் தேவனாக நடித்துள்ள கார்த்தி, நந்தினியாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் போஸ்டர்கள் வெளியான நிலையில் குந்தவையாக நடித்துள்ள திரிஷாவின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதனை நடிகை திரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

கதைப்படி ஆதித்தகரிகாலனின் ஓலையை குந்தவையிடம் கொடுக்க வந்தியத்தேவன் முயல்வார். அப்போதும் இருவரும் காதல் வயப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அவருக்கு  கார்த்தி வந்தியத்தேவனாக அளித்த பதிலில்,, இளவரசி, நீங்கள் இருக்கும் லைவ் லொகேசனை அனுப்புங்கள். உங்கள் அண்ணனின் ஓலையை உங்களிடம் அளிக்க வேண்டும்'' என கலாய்த்திருந்தார்.

இதற்கு தனது டிவிட்டரில் பதிலளித்துள்ள நடிகை த்ரிஷா, “மன்னிக்கவும். அரண்மனையில் ஸ்மார்ட் போன்களும், சாமர்த்தியமானவர்களும் அனுமதிக்கப்படுவதில்லை” என பதிலளித்துள்ளார்.

நடிகை த்ரிஷாவின் இந்த விளையாட்டுத் தனமான பதிவை அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments