2 கோடி பார்வை கடந்த ‘பொன்னியின் செல்வன்’ டீசர்
தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியான பொன்னியின் செல்வன் டீசர் இதுவரை 2 கோடி யூடியூப் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியான பொன்னியின் செல்வன் டீசர் இதுவரை 2 கோடி யூடியூப் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையைப் படமாக்கி வருகிறார் இயக்குநர் மணி ரத்னம். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, அஸ்வின், கிஷோர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இதையும் படிக்க- அதிபர் பதவியில் இருந்து விலகுகிறார் கோத்தபய ராஜபட்ச?
Advertisement
Advertisement
படத்தின் திரைக்கதையை மணி ரத்னமும் குமரவேலும் இணைந்து உருவாக்கியுள்ளார்கள். வசனம் - ஜெயமோகன், இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவாளர் - ரவி வர்மன், கலை - தோட்டா தரணி. படம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் படத்தின் டீசர் தமிழ் உள்பட 5 மொழிகளில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.
தமிழ் டீசரை நடிகர் சூர்யா வெளியிட்டார். இந்த டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ் உள்பட 5 மொழிகளில் இதுவரை 2 கோடி யூடியூப் பார்வைகளை கடந்து டீசர் சாதனை படைத்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.