முகப்பு
செய்திகள்

சிறந்த நடிகைக்கான தேசிய விருது: ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஏமாற்றம்

இரு தமிழ் நடிகைகள் இம்முறை விருது பெற்றும் அந்த நல்வாய்ப்பு ஐஸ்வர்யா ராஜேஷுக்குக் கிடைக்காமல் போய்விட்டது.  

Updated On : 22 ஜூலை 2022, 5:55 pm IST
பகிர்:

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பெ. விருமாண்டி இயக்கிய படம் - க/பெ. ரணசிங்கம். ஜிப்ரான் இசையமைப்பில் வைரமுத்து பாடல்கள் எழுதினார். 

க/பெ. ரணசிங்கம் படம் ஜீ பிளெக்ஸ் ஓடிடி தளத்தில் 2020 அக்டோபர் 2 அன்று வெளியானது. ரூ. 199 செலுத்தி இப்படத்தை ஜீ5 ஓடிடி தளத்தில் பார்த்த ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்தார்கள். இந்தப் படத்தில் சிறப்பாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது. இதற்காக சில விருதுகளையும் அவர் பெற்றார்.

இதனால் க/பெ. ரணசிங்கம் படத்துக்காக ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். 

Advertisement

Advertisement

திரைப்படத் தேசிய விருதுகளுக்கான அறிவிப்பு இன்று வெளியானது. சூரரைப் போற்று படத்துக்காக சிறந்த நடிகைக்கான விருது அபர்ணா பாலமுரளிக்கு அறிவிக்கப்பட்டது. மேலும், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்துக்காக சிறந்த துணை நடிகைக்கான விருதை லட்சுமி ப்ரியா சந்திரமெளலி பெற்றுள்ளார்.

இதையடுத்து க/பெ. ரணசிங்கம் படத்தில் நடித்ததற்காக ஐஸ்வர்யா ராஜேஷுக்கு விருது எதுவும் கிடைக்கவில்லை. ஐஸ்வர்யா ராஜேஷ் இதுவரை நடித்த படங்களிலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியது இந்தப் படத்தில் தான். இரு தமிழ் நடிகைகள் இம்முறை விருது பெற்றும் அந்த நல்வாய்ப்பு ஐஸ்வர்யா ராஜேஷுக்குக் கிடைக்காமல் போய்விட்டது.  இனிவரும் காலங்களில் தனது திறமையை மேலும் நிரூபித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெறுவார் என எதிர்பார்ப்போம். 

இதையும் படிக்க: 68வது தேசிய விருதுகள் அறிவிப்பு - சிறந்த நடிகராக சூர்யா தேர்வு - தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்த சூரரைப் போற்று

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments