சூர்யாவுடன் அடுத்து இணையும் படத்தில்...: கமல் அறிவிப்பு
கடைசி மூன்று நிமிடங்களே வந்து திரையரங்குகளை அதிரவைத்த என் அருமைத் தம்பி சூர்யா...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் நடித்த விக்ரம் படம் ஜூன் 3 அன்று வெளியானது. படம் வெளிவந்த நாள் முதல் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. பெரும்பாலான திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் திரையரங்குக் காட்சிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் இதன் சூழல் வசூலிலும் எதிரொலிக்கிறது.
இந்நிலையில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட விடியோவில் கமல் கூறியதாவது:
தரமான திரைப்படத்தைத் தாங்கிப் பிடிக்க தமிழ் ரசிகர்கள் தவறியதே இல்லை. திறமையான, தரமான நடிகர்களையும் தான். அந்த வெற்றி வரிசையில் என்னையும் விக்ரம் படத்தையும் நீங்கள் தேர்ந்தெடுத்தது எங்கள் பாக்கியம். முன்னணி படக்குழுவினருடன் பெயர் தெரியாமல் பின்னணியில் வேலை செய்த அனைவருக்கும் உங்கள் பாராட்டுகள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டியதுதான் நியாயம். வீரியம் மிக்க நடிகர் படை வெற்றிக்கு முக்கியக் காரணம். கடைசி மூன்று நிமிடங்களே வந்து திரையரங்குகளை அதிரவைத்த என் அருமைத் தம்பி சூர்யா அவர்கள் அன்பிற்காக மட்டுமே அதைச் செய்தார். அவருக்கு நன்றி சொல்லும் படலத்தை அடுத்து நாங்கள் இணையும் படத்தில் முழுவதுமாகக் காட்டிவிடலாம் என நினைக்கிறேன். இயக்குநர் லோகேஷ் அவர்களுக்கு சினிமா மீதும் என் மீதும் இருக்கும் அன்பு, படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளிலும் படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் தெரிந்தது. ரசிகர்களின் அன்பும் அவ்வாறாகவே இருக்கிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.